
கோலாலம்பூர், மார்ச்-31-கோலாலம்பூரில் கடை உடைப்புகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
தனியாக செயல்படும் 44 வயது அந்நபர், தலைநகரில் குறைந்தது 30 கடை திருட்டுகளில் ஈடுபட்டவர் என நம்பப்படுகிறது.
வங்சா மாஜு, டாங் வாங்கி மற்றும் செராஸ் பகுதிகளில் தான் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன.
சந்தேக நபர், பெரும்பாலும் கண்ணாடிக் கதவுகள் உள்ள கடைகளை குறிவைத்து, இரவு அல்லது அதிகாலை நேரங்களில் தாக்குதல் நடத்தி, கண்ணாடியை உடைத்து பணப் பெட்டிகளை திருடிச் செல்வது விசாரணையில் அம்பலமானது.
இந்த திருட்டுச் சம்பவங்களால் ஏற்பட்ட மொத்த இழப்பு 60 ஆயிரம் ரிங்கிட் என மதிப்பிடப்படுகிறது.
அவ்வாடவருக்கு 26 பழையக் குற்றப் பதிவுகள் இருப்பதாகவும், கடந்தாண்டு மார்ச் மாதம் சிறையிலிருந்து வெளியேறிய பிறகு மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் போலீஸ் கூறியது.
மேல் விசாரணைக்காக அந்நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



