
கோலாலம்பூர், ஏப் 16 – குடிநுழைவுத்து துறை அதிகாரிகளிள் ஒத்துழைப்போடு கோலாலம்பூர் மாநகர் மன்றம் நேற்றிவு கூட்டரசு தலைநகரிலுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த அங்காடி வியாபாரிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
சௌக்கிட் Lorong Haji Taib, Jalan Berangan ,Bukit Bintang ஆகிய இடங்களில் உள்ள அங்காடி வர்த்தக மையங்களைச் சுற்றிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. சம்பந்தப்பட்ட பகுதிகளில் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட கண்காணிப்பு மற்றும் வேவு அடிப்படையில் அந்த நடவடிக்கை அமைந்ததாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் தனது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
2016ஆம் ஆண்டின் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச அங்காடி வியாபாரிகள் லைசென்ஸ் சட்டத்தின் கீழ் 15 அங்காடிக் கடைகளில் இருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெளிநாடுகளைச் சேர்ந்த 13 அங்காடி வியாபாரிகள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த இதர இரு வியாபாரிகளுக்கு எதிராகவும் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின்போது , வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருந்த அங்காடி கடைகளுக்கு எதிராகவும் எச்சரிக்கை நோட்டிஸை கோலாம்பூர் மாநகர் மன்றம் வினியோகித்துள்ளது.
ஆவணங்கள் பதிவு மற்றும் பரிசோதனைக்காக வெளிநாடுகளைச் சேர்ந்த 30 ஆடவர்களுடன் 11 பெண்களும் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச குடிநுழைவுத்துறையின் தலைமையக்த்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.