கோலாலம்பூர் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான பூப்பந்துப் போட்டி; டத்தோ ஸ்ரீ சரவணன் தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர், செப்டம்பர்-28,
பிரிக்ஃபீல்ட்ஸ் பூப்பந்து கிளப் ஏற்பாட்டில் கோலாலம்பூர் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையில் முதன் முறையாக பூப்பந்துப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
கூட்டரசு பிரதேசத்தின் அனைத்து 14 தமிழ்ப் பள்ளிகளும் பங்கேற்ற இப்போட்டியை, ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
Cheras Arena Badminton அரங்கில் ஆண் – பெண் என 2 பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் மொத்தம் 224 மாணவர்கள் பங்கேற்றனர்.
பெண்கள் பிரிவில் தம்புசாமி தமிழ்ப் பள்ளியைத் தோற்கடித்து செகாம்புட் தமிழ்ப் பள்ளி வாகை சூடியது.
மூன்றாம் நான்காம் இடங்களை முறையே Edinburgh தமிழ்ப்பள்ளியும் Fletcher தமிழ்ப்பள்ளியும் பிடித்தன.
ஆண்களுக்கான பிரிவில் Edinburgh தமிழ்ப்பள்ளி முதலிடத்தை வென்றது; இரண்டாவதாக விவேகானந்தா தமிழ்ப்பள்ளியும், மூன்றாம் நான்காம் இடங்களை Segambut தமிழ்ப் பள்ளியும் Sentul தமிழ்ப் பள்ளியும் பிடித்தன.
வெற்றியாளர்களுக்கு பதக்கம், சவால் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டனர்.
இவ்வேளையில், இளம் பூப்பந்து வீரர்களை பட்டைத் தீட்டும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டதாக பிரிக்ஃபீல்ட்ஸ் பூப்பந்து கிளப்பின் தலைவர் வி. சேகரன் கூறினார்.
அடுத்தாண்டு மாபெரும் அளவில் இப்போட்டி நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
தமிழ்ப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை இதுபோன்ற போட்டிகள் வெளிக்கொணர உதவும் என வந்திருந்த பெற்றோர்களும் பாராட்டினர்.