
புத்ராஜெயா, மார்ச்-21 -புத்ராஜெயா, பினாங்கு மற்றும் கோலாலம்பூரில் இவ்வாண்டு அடுக்குப் பள்ளிகளைக் கட்டும் முன்னோடித் திட்டத்தை கல்வி அமைச்சு செயல்படுத்துகிறது.
அதிக மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் நெரிசல் பிரச்னையைக் களையும் நோக்கில், வர்த்தக பெறுநிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
அடுக்குமாடி வடிவிலான பள்ளிகளை நிர்மாணிப்பதன் மூலம் செலவினத்தைக் குறைக்க முடிவதோடு, மாணவர்களுக்கு மிகச் சிறந்த கல்வி வசதிக் கட்டமைப்பை உருவாக்கித் தர முடியுமென அமைச்சு நம்பிக்கைத் தெரிவித்தது.
தலைநகரில் 10 முதல் 17 மாடிகளுடன் செங்குத்தாக 2 புளோக் பள்ளிக் கட்டிடங்களை நிர்மாணிக்க DBKL திட்டமிட்டிருப்பதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன.
கோலாலம்பூரில் நிலவும் நிலப் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் மக்கள் தொகைப் பிரச்னைக்குத் தீர்வாக அவ்வாறு உத்தேசிக்கப்பட்டிருப்பதாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தஃபா கூறியிருந்தார்.