
கோலாலம்பூர், செப்டம்பர் 29 –
நேற்று, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தில் நவராத்திரி விழாவின் ஏழாம் நாள் திருவிழா மிக சிறப்பாகவும் பக்தி நெறியுடனும் விமரிசையாக நடைபெற்றது.
வியாபாரிகள் உபயமான நவராத்திரி 7 ஆம் விழாவை தான்ஸ்ரீ நடராஜா தலைமையேற்று மிக அற்புதமாக நடத்தினார்.
இதற்கான முழு ஏற்பாட்டையும் மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமாரின் DSK குழு செய்திருந்தது.
காலை 10.30 மணியிலிருந்து தொடங்கிய விழா, 108 சங்காபிஷேகத்தின் புனிதத் தாளத்துடன் ஆரம்பமாகி, அபிஷேகம், மஹேஸ்வர பூஜை, அன்னதானம், மாலை அபிஷேகம் மற்றும் பூஜை என தொடர்ந்தது.
பிற்பகல் முதல் இரவு வரை பக்தர்களின் பக்தியில் சூழ்ந்திருந்த தேவஸ்தானம் இசைக்கதம்பம், இனிய இசைக்கச்சேரிகள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளால் களைகட்டியது.
மேலும் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்வுடன் வருகை புரிந்த அனைவருக்கும் பிரசாதம் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.
இந்த அற்புத நாளில் ஆலயத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தெய்வீகத் தரிசனம் தந்த காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க செய்தது.
வந்திருந்த அனைவருக்கும் காளாஞ்சி மற்றும் பிரசாதம் அன்புடன் வழங்கப்பட்டதோடு, சிறுவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களும், தாய்மார்களுக்கு புடவைகளும் பரிசாக அளிக்கப்பட்டன.
பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்ட இந்த நவராத்திரி நாளை ஆன்மிகச் செழுமையும் சமூகப் பாசமும் ஒருசேர அலங்கரித்தன.
இத்தகைய அற்புதமான நிகழ்வு இனி வரும் காலங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் என்று DSK டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.