Latestமலேசியா

கோலாலம்பூர் TTDI பகுதியில் கைப்பையைக் கொள்ளையடிக்க முயற்சி; தாக்குதலில் பெண்ணுக்கு கை, தலை பகுதியில் காயம்

கோலாலம்பூர், பிப்ரவரி 4 – கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் Taman Tun Dr Ismail பகுதியில், வாகனத்தின் டயரில் காற்று நிரப்பிக் கொண்டிருந்த 25 வயதுடைய பெண்ணை கொள்ளையடிக்க முயன்ற ஆடவனைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக ஆடவன், பெண்ணின் வாகனத்தை அணுகி, காரில் வைத்திருந்த கைப்பையை எடுக்க முயன்றுள்ளான். இதைக் கவனித்த அப்பெண்ணும் அவரது நண்பரும் அதனைத் தடுக்க முயன்றபோது, இரு தரப்புக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதென்று பிரிக்‌ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல் துறை தலைவர், Asisten Komisioner Hoo Chan Hook தெரிவித்தார்.

மேலும் அக்குற்றவாளி அப்பெண்ணின் கை மற்றும் தலை பகுதிகளில் குத்தியும் அடித்தும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், எந்தப் பொருட்களையும் கொள்ளையடிக்க முடியாமல், அவன் தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளான்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த மோட்டார் சைக்கிளில் போலி பதிவு எண் பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக, சந்தேகநபரின் fotofit வரைபடம் தயாரிக்கப்பட்டு, அவனைப் பிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த வழக்கு, குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!