Latestமலேசியா

சுத்தியலால் தந்தையை கொன்றதாக வேலையில்லாத நபர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – Dabung Rabu வில் kampung Kuala Gris சில் தனது தந்தையை சுத்தியலால் கொலை செய்ததாக வேலையில்லாத நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் அமால் ரஸிம் அலியாஸ் ( Amal Razim Alias ) முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் 39 வயதுடைய நரோஸ்மான் ஒத்மானிடம் ( Narosman Othman) னிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

Kampung Gris சிலுள்ள ஒரு வீட்டில் காலை 6 மணிக்கும் 6.30 மணிக்குமிடையே 74 வயதுடைய ஒத்மான் ஜூசேவுக்கு மரணம் ஏற்படும் வகையில் அவரை நரோஸ்மான் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்க வேண்டுமென அரசு தரப்பில் விசாரணை நடத்தும் இன்ஸ்பெக்டர் முகமட் ஹபிஸ் இமான் அஸ்ரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார்.

இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என்பதோடு அன்றைய தினம் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தஞ்சோங் ரம்புத்தான் மனநோய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!