Latestமலேசியா

சட்டத்தைப் பின்பற்றினால் எவரும் பிரச்சாரம் செய்யலாம் – அன்வார்

சட்டத்தைப் பின்பற்றினால் எவரும் பிரச்சாரம் செய்யலாம் – அன்வார்

புத்ராஜெயா, பிப்ரவரி-19,

‘Dakwah’ எனப்படும் இஸ்லாமிய மதப் பிரசாரங்களை அரசாங்கம் தடுக்காது; ஆனால் அவை சட்டத்திற்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டு நடைபெற வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

_“விதிகளை பின்பற்றுங்கள், அதுவே போதும். பிரச்சாரம் செய்யலாம், வழிபாடு செய்யலாம், ஆனால் அனைத்தும் சட்டத்திற்குள் இருக்க வேண்டும்”_ என்றார் அவர்.

தாம் முன்பு ‘Dakwah’ நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, பாதசாரிகளின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் விதிகளை பின்பற்றியதை அவர் சுட்டிக் காட்டினார்.

அதேபோல், இந்துக் கோவில்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்களின் கட்டுமானத்திலும் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என அன்வார் வலியுறுத்தினார்.

பள்ளிவாசல்கள், மசூதிகள் என வரும்போது, எங்கு வேண்டுமானாலும் அவற்றைக் கட்ட அரசாங்கம் அனுமதிப்பதாக பரவலாகப் பேசப்படுகிறது; ஆனால், பேராக்கில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதற்காக மசூதி ஒன்று இடிக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

அண்மையில், கோலாலாம்பூர் புக்கிட் பிந்தாங்கில் Multiracial Reverted Muslims என்றக் குழுவின் பிரசாரக் கூடாரத்தை DBKL அகற்றிய சம்பவத்தை அடுத்து பிரதமர் அவ்வாறு கூறியுள்ளார்.

அந்த கூடாரம் பாதசாரிகளின் நடைபாதையை மறைத்ததால் சட்டப்படி அகற்றப்பட்டந்தாக, DBKL முன்னதாக விளக்கமளித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!