
கோலாலம்பூர், அக்டோபர்-23 – சட்டவிரோத தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்தி தொடர்புச் சேவையில் இடையூறு செய்ததாக, 2 ஆடவர்கள் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
43 வயது சூங் ஃபோர் செங் (Choong For Seng), 46 வயது லிங் சிவ் லூங் Ling Siew Lung இருவரும், முத்தியாரா டாமான்சாரா பகுதியில் உள்ள ஓர் உணவகத்தின் அருகிலுள்ள சாலையோரத்தில் அக்குற்றத்தைப் புரிந்துள்ளனர்.
அந்த சாதனம் Maxis Sdn Bhd நிறுவனத்தின் தொடர்புச் சேவைக்கு இடையூறு விளைவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் இருவருமே குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினர்.
இச்சம்பவம், அனுமதி இல்லாத தொலைதொடர்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது மற்றும் தொடர்பில் இடையூறு செய்வது மீதான சட்ட அமுலாக்கத்தை வெளிப்படுத்துகிறது.