Latest

சட்டவிரோத குடியேற்றம்: ஜித்ராவில் தந்தை–மகள் உட்பட மூவர் கைது

ஜித்ரா, ஜனவரி 17 – சட்டவிரோதமாக வெளிநாட்டு குடியேற்றர்களை (PATI) நாட்டிற்குள் கொண்டு வந்த சந்தேகத்தின் பேரில், தந்தை மற்றும் அவரது 16 வயது மகள் உட்பட மற்றொரு உள்ளூர் ஆண் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

47 வயதுடைய அந்த நபர், அதிக கூலி பெறும் நோக்கில், தனது மகளையும் நண்பரையும் உடன் அழைத்து, 16 PATI அதாவது சட்டவிரோத குடியேற்றர்களை குறிப்பிட்ட இடங்களுக்கு கொண்டு செல்ல முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கைது நடவடிக்கை, கடந்த புதன்கிழமை, ஜித்ரா டோல் பிளாசாவில், வடக்கு PGA போலீஸ் பிரிவினரும் குபாங் பாசு மாவட்ட போலீசாரும் இணைந்து நடத்திய ‘Op Taring Delta’ நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்டது.

சோதனையில், 9 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் உட்பட, 16 முதல் 35 வயதுக்குட்பட்ட PATI-கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மியான்மார் நாட்டவர்கள் என நம்பப்படுகிறது. கடத்தலுக்காக வாடகை வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, பினாங்கு நிபோங் தெபால் பகுதியில், இந்த கடத்தல் வலையமைப்பின் தலைவர் என சந்தேகிக்கப்படும் மியான்மார் நாட்டு ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மூவரும் SOSMA சட்டத்தின் கீழ் 28 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சட்டவிரோத குடியேறிகள் அனைவரும் குடியேற்றச் சட்டத்தின் கீழ் 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!