
கோலாலம்பூர், ஜனவரி-9 – சட்டவிரோத பள்ளி வேன்கள் குறித்து பெற்றோர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முறையான அனுமதி இல்லாத வேன் அல்லது பேருந்தில் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள், அலட்சியத்திற்காக 2001 குழந்தைகள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
சட்டவிரோத வேன்கள் பெரும்பாலும் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் காப்பீடு இல்லாமல் இயங்குவதால், மாணவர்கள் கடுமையான அபாயத்தில் உள்ளனர்.
எனவே பெற்றோர்கள், பள்ளிப் போக்குவரத்து உரிய அனுமதி மற்றும் காப்பீடு பெற்றதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மாறாக, குறைந்த கட்டணத்துக்காக சட்டவிரோத வேன்களைத் தேர்வு செய்வது, பாதுகாப்பு மற்றும் சட்ட மீறலாகும்.
இது நம் குழந்தைகளின் பாதுகாப்பையும் நலனையும் புறக்கணிக்கும் செயலாகும் என அதிகாரிகள் நினைவுறுத்தியுள்ளனர்.



