
சிலாங்கூர், பிப்ரவரி 10 – சிலாங்கூர் மாநிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு இடங்கள் மீது, சமூக ஒற்றுமையை பாதிக்காமல், சட்டத்தின் வரம்புக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென சிலாங்கூர் Menteri Besar Datuk Seri Amirudin Shari தெரிவித்துள்ளார்.
விதிமுறைகளை மீறி வழிபாட்டு இடங்கள் அமைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்ற பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவிப்பு, மாநிலத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
இதற்காக, ‘சிலாங்கூர் ஐந்து மத வழிபாட்டு இடங்கள் குழுவான LIMAS வழியாக நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 15 ஆண்டுகளில், தகுந்த இடங்களில் சட்டபூர்வமாக வழிபாட்டு இடங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதுடன், விதிகளை மீறி கட்டப்பட்ட சில வழிபாட்டு இடங்கள் அகற்றப்பட்டுள்ளன.
நில உரிமை, நில பயன்பாடு மற்றும் சுற்றுப்புற விளைவுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



