
சண்டாகான், ஜனவரி-12 – சபா, சாண்டாகான், Bandar Sejati Walk வணிக வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் நேற்று காலை இருவர் காரினுள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
அவர்கள் முறையே 18 வயது இளைஞர் மற்றும் அவரது காதலியான 17 வயது மாணவி ஆவார்.
அம்மாணவி காணாமல் போனதாக முன்னதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
காலை 8 மணியளவில், காரின் பின்பக்க இருக்கையில், அனைத்து கண்ணாடிகளும் மூடப்பட்ட நிலையில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இருவரின் உடைமைகள் எதுவும் காணாமல் போகவில்லை.
விசாரணையில் எவ்வித குற்றச்செயல் தடயமும் கண்டறியப்படவில்லை.
இதையடுத்து, உடற்கூறு பரிசோதனை முடிவுகள் வரும் வரை, இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.



