Latestமலேசியா

சதுரங்கத்தில் சாதித்த மலேசிய இளம் வீரர்கள் ஜெனிவன் & கவின் இருவருக்கும் ம.இ.கா விளையாட்டுக் குழு கௌரவம்

கோலாலம்பூர், நவம்பர்-15, ம.இ.காவின் விளையாட்டுக் குழு- MIED மற்றும் குவாலா லங்காட் ம.இ.கா தொகுதி ஏற்பாட்டில், நாட்டின் இரு சதுரங்க நம்பிக்கை நட்சத்திரங்கள் அண்மையில் கௌரவிக்கப்பட்டனர்.

16 வயதான FIDE Master ஜெனிவன் ஜென்கேஸ்வரன், மங்கோலியாவின் உலான் பாத்தோரில் நடைபெற்ற 19-வது ஆசிய பள்ளி சதுரங்கப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.

அவர் சீனா, ரஷ்யா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளின் வீரர்களை வீழ்த்தினார்.

அதே நேரத்தில், 14 வயதான FIDE Master கவின் மோகன், இந்தியா, கோவாவில் நடைபெற்ற FIDE World Cup 2025 போட்டியில் மலேசியாவின் இளம் பிரதிநிதியாக விளையாடி, அர்மேனியாவின் Grand Master ராபர்ட் ஹோவ்ஹனிஸ்யனை (Robert Hovhannisyan) எதிர்த்து சிறப்பாகப் போராடினார்.

இந்த வெற்றிகள், மலேசிய இளைஞர்கள் உலக மேடையில் தங்கள் திறமையை நிரூபித்துள்ளதை காட்டுவதாக, ம.இ.கா மற்றும் MIED விளையாட்டுக் குழுத் தலைவர் அண்ட்ரூ டேவிட் வருணித்தார்.

எனவே தான் பெருமைக்குரிய இச்சாதனை, பயிற்றுநர்கள், குடும்பத்தார் மற்றும் சமூகத் தலைவர்களுடன் கொண்டாடப்பட்டதாக அவர் சொன்னார்.

தனிநபர் விளையாட்டுகளின் மேம்பாட்டுகளுக்கு ம.இ.கா மற்றும் MIED தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வன் அறிவுரையின் பேரில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு ஆக்ககர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதே போல் அரசாங்கம், நிதி ஆதரவாளர்கள் மற்றும் ஊடகங்கள், நாட்டின் நாளைய சதுரங்க ஜாம்பவான்களுக்கு தொடர்ந்து உரிய உதவிகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

சதுரங்க விளையாட்டு வாரம், பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் போன்றவற்றை நடத்தலாமென கல்வி அமைச்சுக்கும் அண்ட்ரூ பரிந்துரைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!