
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 30 – நேற்று, சன்ஷைன் பாலர் பள்ளி குழுமத்தின் கீழ் இயங்கும் லுக்கூட் தலைமையகம், தெலுக் கமாங், சிரம்பான் சென்ட்ரியோ மற்றும் ஃபாரஸ்ட் ஹைட்ஸ் செனவாங் கிளைகள் அனைத்திலும் மலேசியாவின் 68வது சுதந்திர தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் மாணவர்கள் அனைவரும் பாரம்பரிய உடைகளில் பங்கேற்று பாரம்பரிய உணவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு, பாடல்கள், நாடகங்கள், நடனங்கள் என்று அனைத்திலும் சுதந்திர உணர்வை வெளிப்படுத்தினர்.
மேலும் சுதந்திர தினம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த அருமையான விழாவில் 68 வது சுதந்திர நாள் வாழ்த்தினை தெரிவித்து கொண்ட Sunshine கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆர்.வி. சியாம் பிரசாத், ஒவ்வொரு குடிமகனும் நாட்டை நேசித்து ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்று தனதுரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து இணை நிறுவனர் திருமதி பரமேஸ்வரி மனோகரன், சுதந்திரப் போராட்ட வரலாற்றை குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் விளக்கினார்.
இந்நிகழ்வு தேசிய கீதமான நேகராக்கு பாடலுடன் நிறைவடைந்து பின்னர், பள்ளி வளாகம் முழுவதும் “மெர்டேக்கா! மெர்டேக்கா! மெர்டேக்கா!” என்ற முழக்கங்கள் ஒலித்தன.
பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில்
“எங்கள் மாணவர்கள் நாளைய தலைவர்கள்; மலேசியாவின் எதிர்காலம் அவர்களது கைகளில்தான் உள்ளது,” என டாக்டர் சியாம் பிரசாத் மேலும் வலியுறுத்தினார்.