
கோத்தா கினாபாலு, நவம்பர்-4,
கரணம் தப்பினால் மரணம் என்பது போல, காரொன்று மிகவும் ஆபத்தான வகையில் வாகனங்களை முந்திச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அந்த புரோட்டான் வீரா கார், அபாயகரமான முறையில் வழித்தடத்தை மாற்றி, எதிரே வந்த வாகனத்துடன் கிட்டத்தட்ட மோதி விடும் நிலையில் சென்றது dashcam கேமராவில் பதிவாகியுள்ளது.
சபாவில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக, விபத்து தவிர்க்கப்பட்டது; ஒரு நொடியில் தவறு பெரிய மரண விபத்தாக மாறியிருக்கும் என்று வலைத்தளவாசிகள் எச்சரிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட காரோட்டியை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், போலீஸார் தற்போது அந்த வீடியோ பதிவை ஆராய்ந்து வருகின்றனர்.
சாலைகளில் பயணிக்கும் போது வேகக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும், அபாயகரமாக முந்திச் செல்வதைத் தவிர்க்கவும் இந்நேரத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இல்லையெனில் ஒரு கணத்தில் உயிரிழப்பு நேரலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



