கோத்தா கினபாலு, டிச 24 – சபாவில் சிசியா (Syscia ) எனப்படும் புதிய எறும்பு இனம்
கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
Syscia yekzoeae என்று இந்த எறும்புக்கு பெயரிடப்பட்டுள்ளதாக சபா மலேசிய பல்கலைக்கழகத்தின் வெப்பமண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு மையத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் Yek Sze Huei தெரிவித்தார்.
சபாவின் பாபரில் ( Papar )ரில் உள்ள கவாங் வனப் பகுதியில் கடந்த ஆண்டு களப்பணியின் போது இந்த எறும்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டது.
மக்கிப்போன மரத்திலும் மண்ணிலும் எறும்புகள் வாழ்கின்றன. புதிய இனங்கள் மற்ற எறும்பு இனங்களை கட்டாய வேட்டையாடுபவையாகும், மேலும் ராணி எறும்புகள் சிறிய, செயல்படாத இறக்கைகளுடன் பறக்க முடியாதவை .
இந்த குறைக்கப்பட் ட இறக்கை மொட்டுகளின் செயல்பாடு தெரியவில்லை. இந்த கண்டுபிடிப்புகள் ஆசிய மைர்மகாலஜி ( Asian Myrmecology ) இதழில் இந்த மாதம் வெளியிடப்பட்டது.
அதே இதழில், மற்ற இரண்டு எறும்பு இனங்கள் விவரிக்கப்பட்டுள்ளன: சிஸ்சியா சபாஹ்னா Syscia sabahna மற்றும் ஓசெரியா மாக்னா( Ooceraea magna ) .
இவை இரண்டும் Crocker மலைத்தொடரைச் சேர்ந்தவை. சிசியா சபாஹ்னா (Syscia sabahna ) மிகவும் பரவலாக உள்ளது மற்றும் கினாபாலு பூங்காவில் Poringகில் தம்புயுகோன் (Tambuyukon ) மற்றும் Tawau Hills பூங்காவில் காணப்படுகிறது.