Latestமலேசியா

சபாவில் ‘பாக்ஸ்’ ஜெல்லிமீன் கொட்டியதில் சிறுமி உயிரிழப்பு

கோத்தா கினபாலு, ஆகஸ்ட் 22 – சபா ‘Kuala Penyu’ வில் உள்ள பந்தாய் சவாங்கனில் (Pantai Sawangan) நீந்திக்கொண்டிருந்தபோது பாக்ஸ் ஜெல்லிமீன் கொட்டியதில் ஏழு வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தண்ணீரிலிருந்து கரைக்கு வந்த சிறுமி உடனே சரிந்து விழுந்துள்ளார் என்று பியூஃபோர்ட் மாவட்ட காவல்துறைத் தலைவர் வோங் லியோங் மிங் (Wong Leong Ming) தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த அச்சிறுமியின் உடல் தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனைக்காக குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பரிசோதனை முடிவில், சிறுமியின் மரணம் ஜெல்லிமீன் விஷத்தால் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜெல்லிமீன் விஷம் தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் ஒருவர், அதன் கடிக்கு பின் உடனடியாக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகளைப் பகிர்ந்துள்ளார்.

முதலில் அமைதியாக இருந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் 30 வினாடிகள் வினிகரை ஊற்ற வேண்டும் என்றும் தோலில் ஒட்டியிருக்கும் விழுதுகளை துணியைப் பயன்படுத்தி அகற்ற வேண்டுமென்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்டவரின் உடல் அசைவுகளைக் உடனே குறைத்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அமமருத்துவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் மயக்கம் அடைந்து, சுவாசம் அல்லது உயிர் அறிகுறிகள் இல்லை என்றால், உடனடியாக அவசர உதவி எண்ணை அழைத்து, CPR செயல்முறையைத் தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!