
கோத்தா கினபாலு, செப்டம்பர்-18,
சபா மாநிலத்தில் வெள்ள நிலைமை மோசமாகியதோடு இன்று காலைவரை தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் 916 குடும்பங்களைச் சேர்ந்த 3,134 பேர் தங்கியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் Beaufort, Membakut, Penampang, Papar, Putatan, Sipitang ஆகிய ஆறு மாவட்டங்களிலுள்ள 27 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர் என சபா மாநில பேரிடர் நிர்வாகக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Sipitang மாவட்டத்தில் வெள்ளத்தினால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வேளையில் செப்டம்பர் 9 ஆம்தேதி முதல் அங்கு ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரில் 127 கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை மற்றும் மாலையில் சபாவில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதோடு இரவு வேளையில் சபாவின் ஒதுக்குப்புறமான பகுதிகளிலும் மழை பெய்யும் என மலேசிய வானிலை துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே சரவாவில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் Marudiயில் Suarah மண்டபத்தில் திறக்கப்பட்ட நிவாரண மையத்தில் இன்னமும் ஒரே குடும்பத்தைத் சேர்ந்த எண்மர் தங்கியிருக்கின்றனர்.