Latestஉலகம்

மீண்டும் திறக்கப்பட்ட காஷா பள்ளிகளில் 100,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு

ஹமில்டன், பிப் 28 – பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கிய புதிய கல்வி ஆண்டில் கஷா முனை முழுவதிலும் உள்ள பள்ளிகளில் 100,000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிந்து கொண்டுள்ளனர்.

நேற்றுவரை 100,000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது கல்வியை தொடங்கியதாக ஐ.நா நிறுவனத்தின் பேச்சாளரான Stephane Dujarric செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

இன்றுவரை காஷாவில் 165 பொது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 16 மாதங்களுக்குப் பிறகு மாணவர்கள் முதல் முறையாக மீண்டும் கல்வி ஆண்டை தொடங்கியுள்ளனர்.

இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலால் காஷாவிலுள்ள பள்ளிகளில் 85 விழுக்காடு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 12,800 மாணவர்கள் மற்றும் 800 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாக ஊழியர்கள் கொல்லப்பட்டதாக காஷாவின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நடந்த போரில் 1,166 கல்வி நிலையங்கள் சேதமடைந்தன. இந்த சேதத்தின் மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

இதனிடையே ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நிலைமை இன்னமும் மோசமாக இருப்பதாக Dujarric கூறினார். Jenin, Tulkarm மற்றும் Tubas ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் படைகளின் நடடிக்கை தொடர்வதால் மேலும் பலர் காயம் அடைந்ததோடு சுகாதார வசதி, தண்ணீர், மின்சாரம் மற்றும் இதர சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அனைத்துலக சட்டங்கள் மதிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!