
லாஹாட் டத்து, செப்டம்பர்-27,
சபா, லாஹாட் டத்துவில் உள்ள FELCRA தோட்டத்தில் அரிய வகை போர்னியோ பிக்மி யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
FELCRA தோட்ட கங்காணி நேற்று காலை 10.20 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பெண் யானையின் சடலத்தைக் கண்டு, சபா வனவிலங்குத் துறைக்குத் தகவல் கொடுத்தார்.
அக்குள்ள யானை 600 முதல் 1,200 கிலோகிராம் வரை எடையும், சுமார் 5.2 முதல் 5.9 அடி உயரமும் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
யானை இறந்து ஒன்று முதல் இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள், தோட்டாக்கள் அல்லது விலங்கின் சடலத்தில் வெளிப்புற காயங்கள் எதுவும் தொடக்கக் கட்ட ஆய்வுகளில் காணப்படவில்லை.
இருப்பினும், அதன் இறப்புக்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என வனவிலங்குத் துறை அறிக்கையொன்றில் கூறியது.
இந்நிலையில், பிரேத பரிசோதனை குழுவுடன் நாளை உடற்கூறு சோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது.