Latestமலேசியா

சமிக்ஞை பராமரிப்புப் பணிகளால் மே 24 – 26 வரை KTM Komuter, ETS இரயில் சேவைத் தடங்கல்

கோலாலம்பூர், மே-23 – கெப்போங் மற்றும் சாலாக் செலாத்தான் இடையில் சமிக்ஞை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாளை மே 24 தொடங்கி 26 வரை KTM Komuter மற்றும் ETS இரயில் சேவைகள் பாதிக்கப்படவுள்ளன.

Pulau Sebang–Batu Caves–Pulau Sebang மற்றும் Tanjung Malim–KL Sentral–Tanjung Malim ஆகியவையே, பாதிக்கப்படும் Komuter இரயில் வழித்தடங்களாகும்.

இதனால் 50 நிமிடங்களுக்கு தாமதம் ஏற்படலாமென்பதை தெரிவித்துக் கொள்வதாக, KTMB நிறுவனம் அறிக்கையொன்றில் கூறியது.

இவ்வேளையில் சனிக்கிழமைக்கான ETS இரயில் சேவை மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Padang Besar–Segamat மற்றும் Butterworth–Segamat வரைக்குமான பயணங்களுக்கான பிளாட்ஃபோம் மாற்றங்கள், KL Sentral மற்றும் Kuala Lumpur இரயில் நிலையங்களை உட்படுத்தியிருக்கும்.

ETS தாமதம் குறித்து பயணிகளுக்கு SMS வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.

எந்தவொரு சூழலிலும் பயணிகளுக்கு உதவ இரயில் நிலையங்களில் பணியாளர்கள் தயாராக இருப்பர்.

தவிர, பயணிகளும் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதோடு, KTMB செயலியில் MyRailtime நிகழ்நேர வசதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த தற்காலிக சேவைத் தடங்கலானது, இரயில் போக்குவரத்தின் பாதுகாப்பையும் அது ஆக்கப்பூர்வ சேவையை வழங்குவதை உறுதிச் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என KTMB விளக்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!