Latestமலேசியா

சமையல் எண்ணெய் கடத்தல் தாய்லாந்து பெண் கைது

கோத்தா பாரு, மார்ச் 31- காரின் மாற்று டயர் வைக்கும் பகுதியில்
மலேசியாவின் மானிய உதவித் தொகையைக் கொண்ட சமையல் எண்ணெயை கடத்த முயன்ற தாய்லாந்துப் பெண்ணின் முயற்சி முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பெண் கைது செய்யப்பட்டார்.

கிளந்தான், ரந்தாவ் பஞ்சாங் குடிநுழைவு , சுங்க , தனிமைப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் அப்பெண் ஓட்டி வந்த மஸ்டா காரின் பின்பகுதியில் 227 ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு பிரான்டுகளைச் கொண்ட 51 கிலோ எடையைக் கொண்ட ஒரு கிலோ சமையல் எண்ணெய் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுப் பிடித்தனர்.

எல்லையில் பிடிபடாமல் தப்பிக்கும் முயற்சியாக, சமையல் எண்ணெய் பொட்டலங்களை அப்பெண் காரின் பின்புறப் பகுதியில் உயரி டயர் வைக்கும் இடத்தின் உட்புறப் பகுதிக்கு கீழே நேர்த்தியாக மறைத்து வைத்திருந்தது சோதனையின் வழி கண்டறியப்பட்டது.

விசாரணைக்கு உதவும் பொருட்டு அப்பெண் தடுத்து வைக்கப்பட்டதோடு அவர் கடத்த முயன்ற சமையல் எண்ணெய் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கிளந்தான் உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் துணை இயக்குநர் அஸ்வாடி ஜபார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!