
அம்பாங், ஜூன்-17 – அம்பாங், பூசாட் பண்டார் மெலாவாத்தியில் உள்ள பேரங்காடியொன்றில், ஒரு கடையிலிருந்து விலையுயர்ந்த 2 மூக்குக் கண்ணாடிகளைத் திருடிய ஆடவர் பிடிபட்டுள்ளார்.
தப்பியோட முயன்ற 31 வயது அந்நபரை பொது மக்கள் துரத்திப் பிடித்தனர்.
பிறகு போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டார். திருடப்பட்ட 2 மூக்குக் கண்ணாடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான ஆடவருக்கு ஏற்கனவே 21 குற்றப்பதிவுகள் இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது;
அவற்றில் 16 குற்றப்பதிவுகள் போதைப் பொருள் சம்பந்தப்பட்டவை என, அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் மொஹமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.
சம்பவத்தின் போது அந்நபர் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததும் சிறுநீர் பரிசோதனையில் உறுதியானது.
விசாரணைக்கு உதவும் பொருட்டு புதன்கிழமை வரை அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவ்வாடவர் மூக்குக் கண்ணாடிகளைத் திருடிக் கொண்டு ஓடுவதும், அவரை பொது மக்கள் துரத்திப் பிடித்து கடைக்குள் கொண்டுச் செல்வதும் அடங்கியக் வீடியோ காட்சிகள் முன்னதாக வைரலாகின.