
கனோவிட், மார்ச்-13-சரவாக் காட்டில் காணாமல் போன 22 வயது இளைஞர், 5 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
ரிச்சர்ட் லீ அபாங் என்ற அவ்விளைஞர், கனோவிட் பகுதியில் உள்ள தனது Rumah Panjang நீண்ட வீட்டிலிருந்து வெளியேறி அருகிலுள்ள காட்டுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீஸ், தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை தொடங்கினர்.
5 நாட்கள் தொடர்ந்து தேடிய பிறகு, வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் பலவீனமாக இருந்தாலும், காயமின்றி உயிருடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் அவரை காட்டிலிருந்து வெளியே கொண்டு வந்து மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



