கோலாலம்பூர், டிச 5 – தங்களது நிறுவனங்களில் சாதகமான வேலை ஏற்பாடுகளை அனுமதிக்கும்படி கூடுதலான முதலாளிகளை மனித வள அமைச்சு கேட்டுக் கொண்டது. அக்டோபர் மாதம் வரை, பினாங்கு, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜோகூர் பாருவில் 50,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட சுமார் 3,000 நிறுவனங்கள் சாதகமான வேலை ஏற்பாடுகள் மற்றும் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி மேலும் அறிய TalentCorp ஆல் பட்டறைகளில் கலந்துகொண்டதோடு அதனை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்தும் அறிந்துகொண்டதாக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
பல நிறுவனங்கள் இந்த கொள்கையை அமல்படுத்த விரும்புவதாகவும் ஆனால் அதனை எப்படி அமல்படுத்துவதை என்பது தெரியவில்லையென்று எங்களிடம் தெரிவித்துள்ளதோடு இதனை அமல்படுத்தாவிட்டால் தொழிலாளர் சட்டங்களை
மீறுவதாகிவிடும் என்ற தங்களது கவலையும் வெளிப்படுத்தியுள்ளனர் என அவர் கூறினார். இந்த கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் நிறுவனங்கள் திறனுள்ளவர்களை நிலைநிறுத்திக் கொள்வதன் மூலம் தொடர்ந்து போட்டா போட்டி தன்மையை கொண்டிருக்க முடியும். மேலும் நடவடிக்கை செலவினத்தை குறைத்து ஆக்கப்பூர்வமான வேலை சூழ்நிலையை உருவாக்கி உற்பத்தியையும் அதிகரிக்க முடியும் என கோலாலம்பூரில் சாதகமான வேலை ஏற்பாடுகள் குறித்த வழிகாட்டிகளை தொடக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது ஸ்டீவன் சிம் இத்தகவலை வெளியிட்டார்.