கோலாலம்பூர், அக்டோபர்-28, அங்காடி உணவுக் கடைக்காரர் ஒருவர், சுடுநீரில் கொதிக்கும் கோழிக் கால்களைக் கிளறுவதற்கு சாயமடிக்கும் நீண்ட குச்சியைப் பயன்படுத்துவதைக் காட்டும் மூன்று வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
அவரின் சுகாதாரமற்ற உணவுத் தயாரிக்கும் நடைமுறை வலைத்தளவாசிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.
ஒரு வீடியோவில், அழுக்கு நடைபாதையிலிருந்து குச்சியை எடுத்து பானையில் கொதிக்கும் பொருளை கிளறி அதனை அவர் மீண்டும் தரையில் வைப்பதைக் காண முடிகிறது.
வீடியோவைப் பார்த்தவர்கள் அந்தக் கடைக்காரரின் செயலை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
வீடியோவைப் பதிவேற்றிய முகநூல் பக்கம் அது குறித்து அதிகாரத் தரப்பிடம் புகார் செய்ய வேண்டுமென்றும் வற்புறுத்தினர்.
உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் அனுசரித்துப் போக முடியாதென்பதால் அவர் மீது நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என பெரும்பாலான வலைத்தளவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.