Latestமலேசியா

சார்ஜ் செய்தபோது பவர் பேங்க் எரிந்தது -பெண் அதிர்ச்சி

ஷா அலாம், நவ 17 – திடீரென தனது பவர் பேங்கில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண் ஒருவர் பயங்கரமான தருணத்தை எதிர்கொண்டார்.

@itsmefihaa அல்லது 28 வயதான நோர் ஷபிஹா பாத்திஹா ( Nor Shafiha Fatiha ) எனற் டிக்டோர் பயணர் பகிர்ந்த வீடியோ மூலம் இது தெரியவந்தது. வேலை நேரத்தில் பவர் பேங்கை சார்ஜ் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். பவர் பேங்க் சாதனம் சார்ஜ் செய்யத் தொடங்கிய சுமார் 10 நிமிடங்கள் கழித்து அதிலிருந்து புகை வெளியேறியது.

அதனைத் தொடர்ந்து பவர் பேங்க் எரியத் தொடங்கியதும், தாம் உடனடியாக சாதனத்தின் அருகே இருந்த மடிக்கணினி மற்றும் தொலைபேசியை நகர்த்தியதாகவும் அப்போது தனது முதலாளி மற்ற ஊழியர்களிடம் உதவி கேட்க அலுவலகத்தின் கீழே சென்றுவிட்டார்.

எனினும் தீயை அணைக்கும் கருவியை பயன்படுத்தி தீயை அப்பெண் அனைத்துள்ளார். இந்த பவர் பேங்கை ஆன்லைனில் வாங்கிய தாம் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாகத்தான் அதனை பயன்படுத்தி வருவதாகவும் அதற்குள் அது எப்படி தீப்பிடிக்க முடியும் என்றும் Nor Shafiha கேள்வி எழுப்பினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!