Latestமலேசியா

சாலையில் பகடி வதை; ஆடவன் கைது

ஜோர்ஜ் டவுன், டிச 27 -இம்மாதம் 25ஆம் தேதி நண்பகல் மணி 1.48 அளவில் ஜாலான் பினாங் சாலையில் ஏற்பட்ட பகடி வதை தொடர்பில் தொழிற்சாலை ஊழியரான ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். அன்றைய தினம் இரவு மணி 9.50 அளவில் ஆயர் ஈத்தாம், ஜாலான் பாடாங் தேம்பாக்கிற்கு அருகே 33 வயதுடைய அந்த ஆடவன் கைது செய்யப்பட்டதாக பினாங்கு தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் Superintenden லீ சுவி சேக் (Lee Swee Sake) தெரிவித்தார். அந்த காரிலிருந்து ஒரு இரும்புச் சங்கிலி , டீ சட்டை மற்றும் தலைக்கவசம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஆடவன் இதற்கு முன் இரண்டு குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட போதிலும் அவனிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. எனினும் விசாரணைக்காக அந்த நபர் டிசம்பர் 28ஆம் தேதிவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக Lee Swee Sake கூறினார்.

36 வயதுடைய பெண் ஒருவர் டிசம்பர் 25ஆம்தேதி போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த ஆடவன் கைது செய்யப்பட்டான் . அந்தப் பெண் ஜாலான் பினாங்கில் காரை ஓட்டிச் சென்றபோது, ​​அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் திடீரென தனது காரின் கண்ணாடியில் இரும்புச் சங்கிலியை அசைப்பதைக் கண்டார். அவ்வாறு செய்ததற்கான அந்த நபரின் நோக்கம் குறித்து அந்தப் பெண்ணுக்கு உறுதியாகத் தெரியாவிட்டாலும் அவர் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!