
கோலாலம்பூர், ஜனவரி-12 – கோலாலம்பூர்–சிரம்பான் நெடுஞ்சாலையில் ஒரு முதியவரின் சாலை அடாவடி சம்பவம் வைரலாகியுள்ளது.
வேலையில்லா 60 வயது அவ்வாடவர் மற்றொரு ஓட்டுநரிடம் பொம்மை துப்பாக்கி காட்டியதன் நேரில் போலீஸ் அவரைக் கைதுச் செய்தது.
சமூக ஊடகங்களில் பரவிய 34 வினாடி வீடியோவில் இருப்பது தான் தான் என்பதை விசாரணையில் அவர் ஒப்புக்கொண்டார்.
சமிக்ஞை காட்டாமல் மற்றொரு வாகனம் வழி மாறியதால், கோபத்தில் அவ்வாகனத்தை முந்திச் சென்று, கார் கண்ணாடியைத் திறந்து, போலி துப்பாக்கியைக் காட்டியதாக அம்முதியவர் கூறியுள்ளார்.
அவரிடமிருந்து 2 பொம்மை துப்பாக்கிகளும் அவரது சிவப்பு SUV வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏற்கனவே அவர் ஒரு குற்றப்பதிவைக் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
பொம்மை ஆயுதம் என்றாலும், அதனை அச்சுறுத்தலுக்குப் பயன்படுத்தினால் அது கடுமையான குற்றமாகும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



