Latestமலேசியா

சிகிச்சைக்குப் பின் நலமாக வீடு திரும்பினார் மலேசிய நகைச்சுவை நடிகர் சத்தியா

கோலாலம்பூர், அக்டோபர் 7 –

மலேசிய நகைச்சுவை உலகின் பிரபல மூத்த நடிகர் சத்தியா, 23 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இறுதியாக நலமாக வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் சத்தியாவின் இடது கால் அகற்றும் அறுவை சிகிச்சைக்கு பின்பு அவர் மருத்துமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அவருக்கு மீண்டும் ஒரு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதெனவும், அதற்குக் காரணம் அதே காலில் ஏற்பட்ட இரத்தக் கட்டி எனவும் சத்தியாவின் மகள் கூறியிருந்தார்.

வீடு திரும்பிய தனது தந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் எனவும் இரண்டு பேரக்குழந்தைகளையும் பார்த்தவுடனே அன்பாக அணைத்துப் பாசமழை பொழிந்தார் எனவும் தந்தையின் நெகிழ்ச்சியான தருணங்களை அவரது மகள் பகிர்ந்துக் கொண்டார்.

1990களிலிருந்து மலேசிய நகைச்சுவை உலகில் பிரபலமான இவர். ‘Pi Mai Pi Mai Tang’ உள்ளிட்ட பல தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும், நாடகங்களிலும் நடித்து தனக்கென தனி முத்திரைப் பதித்தவர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!