
கோலாலம்பூர், நவம்பர்-1,
கம்போடியாவில் செயல்படும் மோசடி கும்பலுடன் தொடர்பிருப்பதாக நம்பப்படும் 7 மலேசியர்களை சிங்கப்பூர் தீவிரமாகத் தேடி வருகிறது.
அந்த 7 மலேசியர்கள் உட்பட மொத்தம் 34 சந்தேக நபர்களுக்கு கைது ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
அந்த 34 பேரும், மேலும் 15 சந்தேகப் பேர்வழிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர்; கடந்த மாதம் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட இரு மலேசியர்களும் அவர்களில் அடங்குவர்.
அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து சிங்கப்பூரியர்களை குறி வைத்து செயல்படும் மோசடி கும்பலுக்கு எதிராக, முன்னதாக சிங்கப்பூர் கம்போடிய போலீஸார் செப்டம்பரில் ஒருங்கிணைந்த சோதனையை மேற்கொண்டனர்.
அக்கும்பல் 41 மில்லியன் சிங்கப்பூர் டாலர் நட்டத்துக்குக் காரணமான 438 மோசடி சம்பவங்களுக்குக் காரணம் என நம்பப்படுகிறது.



