Latest
தைப்பிங்கில் பூட்டப்பட்ட வீட்டில் மூதாட்டி சடலமாக கண்டுபிடிப்பு

தைப்பிங், ஜனவரி-4,
பேராக், தைப்பிங்கில் பூட்டப்பட்ட வீட்டின் உள்ளே மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமுந்திங், தாமான் அசிசுல் ரஹ்மானில் உள்ள வீட்டிலிருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்காததை அடுத்து, போலீஸாரின் கோரிக்கையின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால், சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தி கதவு திறக்கப்பட்டது.
அப்போது, 64 வயது மூதாட்டி வீட்டின் வரவேற்பறையில் அசைவின்றி கிடந்தார்.
உடன் வந்த மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டதில், அம்மூதாட்டி ஏற்கனவே உயிரிழந்திருந்தது உறுதிச் செய்யப்பட்டது.
அவரது உடல் மேல் விசாரணைகளுக்காக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுவரை சந்தேகத்திற்கிடமான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.



