Latestமலேசியா

சித்தியவான் சாலை விபத்து; மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு ஆடவர் பலி

ஈப்போ, செப்டம்பர்-21,

பேராக், சித்தியவானில் நேற்றிரவு காருடன் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளோட்டி கொடூரமாக உயிரிழந்தார்.

சுங்காய் வாங்கி, தாமான் நேசா பகுதியில் இரவு 7 மணிக்கு மேல் அவ்விபத்து ஏற்பட்டது.

அதில் Honda EX5 மோட்டார் சைக்கிள் மற்றும் ஹோண்டா சிவிக் கார் சம்பந்தப்பட்டதாக, பேராக் தீயணைப்பு – மீட்புத் துறை கூறியது.

50 வயது மோட்டார் சைக்கிளோட்டி சாலையில் தூக்கி எறியப்பட்டு கம்பத்தில் மோதியதால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆனால் தீயணைப்பு வண்டி வந்தபோது கார் ஓட்டுநர் அங்கு இல்லை; அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து அச்சம்பவம் மேல் விசாரணைக்காக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!