
சித்தியவான், டிசம்பர்-2 – பேராக், சித்தியவான், Manjong Point-டில் உள்ள 24 மணிநேர பலசரக்குக் கடையில், வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டைப் போன்ற ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, போலீஸார் ஒருவரை கைதுச் செய்துள்ளனர்.
கடையில் உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் நேற்றிரவு வெடிகுண்டைப் போன்ற ஒரு பொருள் இருப்பதை கண்டு அதிர்ந்துபோன கடை ஊழியர்களில் ஒருவர், போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்தது.
விரிவான சோதனை நடத்தியதில் அந்தப் பொருளில் வெடிப்பொருட்கள் எதுவும் இல்லை என்றும், முழுமையற்ற சுற்று இருந்ததால் அது செயல்படவில்லை என்பதையும் அப்பிரிவு உறுதிப்படுத்தியது.
இதையடுத்து, அச்சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபரை, கடையின் முன் போலீஸார் கைதுச் செய்தனர்.



