
சியோல், ஆகஸ்ட் 19 – சியோல் நாட்டில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லா ஷட்டில் பேருந்து சேவை செப்டம்பர் இறுதிக்குள் அறிமுகமாகவுள்ளது.
இந்த ஓட்டுநர் இல்லா பேருந்துகள் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயக்கப்படும் என்றும் வார இறுதிகள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் இந்தச் சேவை இருக்காது என்றும் அறியப்படுகின்றது.
சேவை ஆரம்பிக்கும் திகதி குறித்து இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், முதற்கட்டத்தில் பயணிகள் இச்சேவையை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
பின்னர் கட்டணத்தைச் செலுத்தி மற்ற நகரப் பேருந்துகளைப் போலவே பயணிகள் ஏறிச் செல்லலாம்.
ஓட்டுநர் இருக்கை இல்லாத இந்த பேருந்தில், U-வடிவில் அமைக்கப்பட்ட இருக்கைகள், பெரிய தகவல் திரைகள், சக்கர நாற்காலி, மற்றும் லிப்ட் போன்ற வசதிகள் உட்பட பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் அப்பேருந்தில் இருப்பார்.
ஆகஸ்ட் 22 முதல் சோதனை இயக்கங்கள் தொடங்கப்படுவதைத் தொடர்ந்து அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ சேவை தொடங்கும் என்றும் அதற்கு முன், நிபுணர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக சியோல் நகராட்சி தெரிவித்துள்ளது.