
சிரம்பான், செப் 8 – சிரம்பான் , தாமான் ராசா ஜெயாவிலுள்ள வீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவ்வீட்டிலுள்ள ஒருவரை கத்தியால் குத்தி காயம் விளைவித்த பின்னர் தப்பிச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டான்.
நேற்று மாலை மணி 6.24 அளவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பில உள்நாட்டைச் சேர்ந்த ஆடவரிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Muhamad Hatta che Din தெரிவித்தார்.
கழுத்தில் வெட்டுக் காயத்துடன் 31 வயது ஆடவர் ஒருவரை அவ்வீட்டில் கண்டதையும் தனது புகாரில் அந்த ஆடவர்தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காயத்திற்குள்ளான நபர் Tuanku Jaafar மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதோடு , போலீசார் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து தலைமறைவான சந்தேகப் பேர்வழி இன்று காலையில் சிலாங்கூர், சுங்கை பூலோ மருத்துவமனையில் கைது செய்யப்பட்டான்.
அந்த நபர் சிரம்பான் ஜெயா வீட்டிலிருந்து தப்பியோடியபோது விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக Muhamad Hatta வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு இம்மாதம் 11 ஆம்தேதிவரை அந்த 23 வயதுடைய அந்த ஆடவனை தடுத்து வைப்பதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.