Latestமலேசியா

சிரம்பானில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் தம்பதியர் மரணம்

சிரம்பான், ஜன 6 – Bukit Putus சிற்கு அருகே Jalan Seremban – Kuala Pilah சாலையில்
ஒரு தம்பதியர் பயணம் செய்த கார் இதர இரண்டு வாகனங்களுடன் விபத்துக்குள்ளானதில் அவ்விருவரும் மரணம் அடைந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்திலேயே 50 வயது பெண் இறந்த வேளையில் அவரது 52 வயது கணவர் மருத்துவமனையில் மரணம் அடைந்தார் என சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohamad Hatta Che Din தெரிவித்தார். நேற்று மாலை மணி 6.45 அளவில் சிரம்பானிலிருந்து கோலாப் பிலாவுக்கு Proton Exora வை ஓட்டிச் சென்ற 22 வயதுடைய ஆடவரின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரேயுள்ள வழித்தடத்தில் நுழைந்ததைத் தொடர்ந்து புரோடுவா கஞ்சில் மற்றும் புரோடுவா Axia கார்களில் மோதியதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் முகமட் ஹட்டா தெரிவித்தார்.

இதனைக் தொடர்ந்து புரோடுவா Axia காரின் முன்புறம் அமர்ந்திருந்த பயணி தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தார். Proton Exora காரை தனியாக ஓட்டிவந்த அதன் ஓட்டுனர் இரு கார்களிலும் காயம் அடைந்த வேளையில் புரோடுவா கஞ்சிலில் இருந்த பயணி சொற்ப நிலையில் காயத்திற்கு உள்ளானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!