
சிரம்பான், நவம்பர்-14, இன்று காலை சிரம்பான் அருகே தெற்கு நோக்கி செல்லும் PLUS நெடுஞ்சாலையில் நிகழ்ந்த துயர விபத்தில், 22 வயது இளைஞர் உயிரிழந்தார்.
அவர் ஓட்டிய Honda Accord கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை மோதி, சுமார் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தில் விழுந்தது.
தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்து காலை 10.20 மணிக்கு சம்பவ இடம் விரைந்தனர்.
பள்ளத்தில் நொறுங்கியக் காருக்குள் சிக்கியிருந்த இளைஞரை 15 நிமிடங்களில் வெளியேற்றினர்.
ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
மேல் விசாரணைக்காக உடல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விபத்துக்கானக் காரணம் விசாரிக்கப்படுகிறது.



