
கோலாலம்பூர் , ஏப் 16 – நெகிரி செம்பிலான் சிரம்பானில் வர்த்தக மையம் ஒன்றில் பாராங் கத்தியினால் ஆடவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.
அந்த தாக்குதல் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் நேற்று மாலை மணி 5 அளவில் போர்ட்டிக்சனில் 35 மற்றும் 47 வயதுக்கிடையிலான அந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக சிரம்பான் போலீஸ் தலைவர் ஹட்டா சே டின் ( Hatta Che Din ) தெரிவித்தார்.
அந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பாராங் கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான மூன்று சந்தேக பேர்வழிகளும் குற்றவியல் பின்னணியை கொண்டுள்ளனர். அவர்கள் இதற்கு முன் போதைப் பொருள் மற்றும் வன்செயல் குற்றச்செயல்களிலும் சம்பந்தப்பட்ள்ளதாக Hatta Che Din கூறினார். அந்த நபர்கள் தற்போது மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.