
கோலாலம்பூர், அக் 24 –
(CSAM ) எனப்படும் சிறார் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களுக்கு எதிரான அண்மைய நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 17 வயது மாணவன் , இதுபோன்ற வீடியோக்களை ஆன்லைனில் விற்பனை செய்து ஒன்பது மாதங்களில் 76,000 ரிங்கிட் சம்பாதித்துள்ளான் .
இளைஞர்களிடையே ஒழுக்க சீர்குலைவு மற்றும் டிஜிட்டல் லாபம் ஈட்டுவதற்கான கவலைக்குரிய அறிகுறி இதுவாகும் என தேசிய போலீஸ் படைத் தலைவரான IGP Datuk Seri Mohd Khalid Ismail வருணித்தார்.
ஒவ்வொரு வீடியோவையும் அந்த மாணவன் 30 ரிங்கிட் கட்டணத்திற்கு விற்பனை செய்துள்ளான் என இன்று புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
MCMC எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் உதவியுடன் புக்கிட் அமான் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் விசாரணைப் பிரிவான D11 இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.
நாடு முழுவதும் 37 சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது , ஆயிரக்கணக்கான CSAM மற்றும் ஆபாச உள்ளடக்கத்துடன் 12 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.
17 வயது இளைஞன் teenage Telegram குழுவை நடத்தி வந்துள்ளான். அங்கு Tumblr இல் கிடைத்த உள்ளடக்கத்தை ஒரு வீடியோவிற்கு 50 ரிங்கிட்வரை விற்றுள்ளான்.
அவன் e-wallets and QR- அடிப்படையில் வங்கி மூலம் பண பட்டுவாடாவை பெற்றுள்ளான்.
இதனிடையே பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் பழக்கவழக்கங்களைக் கண்காணிப்பதிலும், சைபர் சுரண்டலின் அதிகரித்து வரும் அலையை எதிர்த்துப் போராடுவதற்கு தார்மீக மதிப்புகளை வளர்ப்பதிலும் வலுவான பங்கை ஆற்றவேண்டும் என IGP கேட்டுக் கொண்டார்.



