
கோலாலம்பூர், டிச 4 – இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய கடுமையான மழையைத் தொடர்ந்து, சிலாங்கூரில் மூன்று மாவட்டங்களில் உள்ள ஐந்து நீர் மட்ட நிலையங்கள் இன்று காலை அபாய அளவைத் தாண்டின.
காலை 7.15 மணி நிலவரப்படி, சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் (JPS) அதிகாரப்பூர்வ வெள்ள தகவல் இணையதளத்தில் தரவு புதுப்பிப்புகளின் அடிப்படையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
Sabak Bernamமில் Rimba KDR மதகு , Hulu Langatடில் கKampung Sungai Serai 12 ஆவது மைல் , 15ஆவது மைல் மற்றும் Siren 12 ஆவது மைல் , செப்பாங்கில் Jenderam Hilir, Batu 12 அணைக்கட்டு மற்றும் Jenderam Hilir ஆகிய நீர் மட்ட நிலையங்கள் அபாய அளவை தாண்டியுள்ளன.
உலு லங்காட்டில் Pekan Bangi Lama மற்றும் Sungai Serai Tol Batu 12 நீர் மட்ட நிலையங்களும் எச்சரிக்கை அளவை கடந்துள்ளன.
இதனிடையே கோலா சிலாங்கூரில் Pintu Air Ijok, Bukit Changgang, Kuala Langat, கிள்ளானில் Bandar Klang மற்றும் Taman Desa Kemuning, ஆகிய நிலையங்களிலும் நீர் மட்டம் எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளன.
இதுதவிர Pekan Kajangகில் Kg Pasir , உலு லங்காட்டில் Kg Lembah Jaya Utara, Ampang ஆகிய நீர் மட்ட நிலையங்களும் எச்சரிக்கை அளவைத் தாண்டிவிட்டன.



