
சீனப் புத்தாண்டில் Pop‑Pop, Happy Boom பட்டாசு, வாணவெடிகளுக்கு மட்டுமே அனுமதி
கோலாலம்பூர், பிப்ரவரி-16,
நாளைய சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, Pop‑Pop பட்டாசுகள் மற்றும் Happy Boom வாணவெடிகளை மட்டுமே விற்க போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.
ஆபத்தான வெடிப்பொருட்கள் இல்லாததால், இவை பாதுகாப்பானவையாக கருதப்படுவதாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் கூறினார்.
ஆனால், விற்பனை செய்ய விரும்புவோர் சிறப்பு அனுமதி பெற வேண்டும்; அது மாவட்ட போலீஸ் தலைமையகத்திலிருந்து மட்டுமே கிடைக்கும் என்றார் அவர்.
விதிகளை மீறி, தடைச் செய்யப்பட்ட பட்டாசுகளை விற்போர், வைத்திருப்போர் மற்றும் வெடிப்போருக்கு எதிராக, வெடிப்பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறையும் 10,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.
இவ்வேளையில், பொது மக்களுக்குத் தொந்தரவை ஏற்படுத்தும் என்பதால், நள்ளிரவுக்கு மேல் பட்டாசு மற்றும் வாணவெடிகளுக்கு அனுமதியில்லை எனவும் அவர் நினைவுறுத்தினார்.



