
தியான்மீன், செப்டம்பர்-4 – 4-நாள் சீன பயணத்தின் போது வட கொரியத் தலைவர் Kim Jong Un-னை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்செயலாகச் சந்தித்தார்.
சீன மக்கள் புரட்சி மற்றும் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80-ஆம் நிறைவாண்டை நினைவுக் கூறும் வகையில், பெய்ஜிங், தியான்மீன் சதுக்கத்தில் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடிய போது அந்த எதிர்பாரா சந்திப்பு நிகழ்ந்தது.
Kim Jong Un-னுடன் தாம் கைக்குலுக்கி பரஸ்பரம் விசாரிக்கும் புகைப்படத்தை அன்வார் தனது ஃபேஸ்புக்கில் பதிவுச் செய்துள்ளார்.
ஒரு கப்பான சம்பவத்தால் 2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு வட கொரியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் தூரக உறவு நின்றுபோனது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில் அந்த தியான்மீன் சதுக்கத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்புப் பேரணியில் அன்வார், Jong Un, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உட்பட 26 உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.
அதில் சீனா தனது முழு இராணுவ பலத்தையும் காட்சிப்படுத்தி பிரமிக்க வைத்ததோடு, மேற்கத்திய நாடுகளை உள்ளபடியே அலறவும் விட்டுள்ளது.