
புத்ராஜெயா, ஏப்ரல்-14, சீன அதிபர் சீ சின் பிங் அரசு முறைப் பயணமாக மலேசியா வருவதையொட்டி, நாளையும் வியாழக்கிழமையும் KLIA 2 சாலையைப், பயனர்கள் தற்காலிகமாகப் பயன்படுத்த முடியாது.
புறப்படும் மற்றும் வந்திறங்கும் மாடம், கார் நிறுத்துமிடம் ஆகியவை வாகனங்களுக்கு மூடப்படுமென, Malaysia Airports Holdings Bhd (MAHB) தெரிவித்துள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6 முதல் இரவு 7 மணி வரையிலும், பின்னர் ஏப்ரல் 17-ஆம் தேதி காலை 8.50 மணி முதல் 9.50 மணி வரையிலும் லெபோ KLIA, ELITE நெடுஞ்சாலை, Linkaran Putrajaya, புத்ராஜெயா-டெங்கில் நெடுஞ்சாலை, பெர்சியாரான் செலாத்தான், லெபோ கெமிலாங், ஜாலான் P5 ஆகியச் சாலைகள் முழுமையாக மூடப்படவுள்ளது.
அதன் போது, டெர்மினல் 2 முனையத்தை டெர்மினல் 1 முனையத்திலிருந்து KLIA Transit வழியாகத் தான் அணுக முடியும்; டெர்மினல் 2 முனையத்தில் வந்திறங்கும் பயணிகள் அடுத்தப் பயணத்தைத் தொடர KLIA Transit மூலமாகத் தான் டெர்மினல் 1 முனையத்துக்குச் செல்ல முடியும்.
எனவே, தாமதத்தைத் தவிர்க்க, சாலை மூடப்படும் நேரத்திற்கு வெளியே, விமான நிலையத்திற்குச் செல்வது அல்லது வெளியேறுவது குறித்து, பயணிகள் முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டுமென, MAHB கேட்டுக் கொண்டது.
வாகனமோட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுக்கு மாற்றுப் பாதையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதாவது, ELITE (E6) வழியாக Serenia Tol வழியாக வெளியேறி Koa Warisan-னை அடைந்து, அங்கிருந்து Jalan KLIA 1 – Bulatan Charterfield வழியாக KLIA டெர்மினல் 1 முனையத்தை அடையலாம்.
சீன அதிபரின் வருகையின் போது பாதுகாப்புப் பணிகள் அனைத்தும் சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்ய வாகனமோட்டிகள் உள்ளிட்ட தரப்பினரின் ஒத்துழைப்பை நாடுவதாக MAHB கூறியது.