Latestமலேசியா

சீன புத்தாண்டை முன்னிட்டு 50% டோல் கட்டண தள்ளுபடி

சீன புத்தாண்டை முன்னிட்டு 50% டோல் கட்டண தள்ளுபடி

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 7 –

சீன புத்தாண்டை முன்னிட்டு, மலேசிய அரசு நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் 50 விழுக்காடு சுங்கச்சாவடி அதாவது டோல் கட்டண தள்ளுபடி வழங்குவதாக பணிகள் அமைச்சர் Alexander Nanta Linggi அறிவித்துள்ளார்.

இந்த முடிவு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது எனவும் இதன் மூலம் சுங்கச்சாவடி நிறுவனங்களுக்கு இழப்பீடாக அரசுக்கு சுமார் 19.5 மில்லியன் செலவாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த தள்ளுபடி பிப்ரவரி 14 காலை 12.01 மணி முதல் பிப்ரவரி 15 இரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும். Class 1 தனியார் வாகனங்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படும்.

மேலும் எல்லைப் பகுதிகளில் உள்ள சுல்தான் இஸ்கண்டார் கட்டிடம் மற்றும் தஞ்சோங் குபாங் சுங்கச்சாவடிகளில் இந்த தள்ளுபடி பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.

பண்டிகைக் கால பயணச் செலவுகளை குறைப்பதோடு, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அமைச்சர் தெரிவித்தார்.

நெடுஞ்சாலை பயனர்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடவும், MyPLUS-TTA மற்றும் LLM TuJu Highway Navigation App ஆகிய செயலிகளை பயன்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், வேக வரம்புகளை பின்பற்றவும், Smart Lane பயன்படுத்தும் போது கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

அதே வேளை அமைச்சர் தமது சீன புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் சாலையில் அனைவரும் பாதுகாப்பாக பயணம் செய்யவும் நினைவுப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!