பெய்ஜிங், செப்டம்பர் -15 – பிரேசிலிய தாபீர் ( tapir) விலங்கினத்தைச் சேர்ந்த உலகின் ஒரே இரட்டைக் குட்டிகள், சீனாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவ்விரு குட்டிகளையும் Guangzhou Safari பூங்காவில் உள்ள பிரேசிலிய தாபீர் செப்டம்பர் 4-ம் தேதி ஈன்றெடுத்தது.
அரிதாகப் பிறந்துள்ள இரு குட்டிகளும் தாயுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரேசிலிய தாபீர்கள் கால் குளம்புகள் கொண்ட விலங்கினத்தைச் சேர்ந்ததாகும்.
தென் அமெரிக்க தாபீர்கள் என்றும் அழைக்கப்படும் இந்த பிரேசிலிய தாபீர்கள், அமேசான் மழைக்காடுகளில் வாழும் மிகப்பெரிய நிலவாழ் விலங்காகும்.