
வாஷிங்டன், ஏப்ரல்-26- அமெரிக்கா – சீனா இடையிலான வரிப் போர் தொடர்பில் நாள்தோறும் அதிபர் டோனல்ட் டிரப் எதையாது பேசுவதும், அதனை சீனா மறுப்பதுமாக நிலவரம் போய்க் கொண்டிருக்கிறது.
ஆகக் கடைசியாக, சீன அதிபர் சீ சின் பிங் தொலைப்பேசியில் அழைத்து தம்மிடம் பேசியதாக டிரம்ப் கூறியுள்ளார்.
எனினும் அது எப்போது நடந்தது என்பதை, டைம் சஞ்சிகையுடனான பேட்டியில் டிரம்ப் குறிப்பிடவில்லை.
“சீ எனக்கு அழைத்தார்; அதனால் அவர் பலவீனமானவர் என நான் கருதவில்லை” என்ன டிரம்ப் சொன்னார்.
ஆனால், பெய்ஜிங் இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அமெரிக்கா – சீனா இடையில் தற்போது பொருளாதார அல்லது வாணிபப் பேச்சுவார்த்தை எதுவும் இல்லையென, சீன வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெளிவுப்படுத்தினார்.
பரஸ்பர வரி என்ற பெயரில் அவ்விரு பொருளாதார வல்லரசுகளும் 1 மாதமாக கடுமையாக மோதி வருகின்றன.
சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா ஒரேடியாக 145 விழுக்காட்டுக்கு வரியை உயர்த்திய வேளை, அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா 125 விழுக்காட்டு வரியை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளிகளுடனான வாணிப ஒப்பந்தங்கள் குறித்து அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படும் என டிரம்ப் கோடி காட்டியுள்ளார்.