
சுங்கைப் பட்டாணி, செப் 22 – சுங்கைப் பட்டாணியில் Paya Nahu அடுக்கு மாடி குடியிருப்பில் ஆடவர் ஒருவரை கத்தியால் வெட்டியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழியின் தந்தையை போலீசார் தடுத்துவைத்துள்ளனர்.
நேற்று சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்ட பின்னர் அவனது தந்தையான 50 வயது நபர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர்
Hanyan Ramlan தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு போதைப் பொருள் அல்லது குண்டர் கும்பல் தகராறு காரணம் அல்ல என கூறப்பட்டது.
அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் விசாரணைக்கு உதவும் பொருட்டு தண்டனைச் சடடத்தின் 326ஆவது விதியின் கீழ் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை மணி 3 அளவில் தனது சகோதரருக்காக அந்த நபர் காத்திருந்தபோது 20 வயதுடைய சந்தேகப் பேர்வழி தாக்கியுள்ளான். இதனால் காயம் அடந்த அந்த நபர் தற்போது தற்போது சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டது.