
சுங்கை பட்டாணி, செப்டம்பர்-3 – கெடா, சுங்கை பட்டாணியில் வீட்டு வளாகத்தில் துணிகளைக் காய வைத்துக் கொண்டிருந்த மாது, மர்ம ஆடவன் சுவரேறி குதித்ததால் அதிர்ந்துபோனார்.
பண்டார் பெர்டானாவில் நேற்று காலை 7.30 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவம் CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
பின்பக்கம் வழியாக நுழைந்து சுவரில் ஏறிக் குதித்த ஆடவன் பிறகு வீட்டுக்குள் நுழைவது அதில் தெரிகிறது.
பதற்றத்தில் துணிகளைப் போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடிய அந்த இல்லத்தரசி, கதவை சாத்த மறந்துவிட்டார்.
பின்னர் காலை 10 மணி வாக்கில் அவர் நடந்தவற்றை போலீஸில் புகார் செய்தார்.
CCTV துணையுடன் சந்தேக நபரை அடையாளம் கண்டு வருவதாக குவாலா மூடா போலீஸ் கூறியது.
எனினும், வீட்டில் ஏதும் கொள்ளைப் போனதா அல்லது யாருக்காவது காயம் ஏற்பட்டதா என்ற மேல் தகவல்கள் இல்லை.